KUALA LUMPUR, 23 Sept — Presiden Parti Keadilan Rakyat (PKR) Datuk Seri Anwar Ibrahim pada sidang media hari ini. Beliau mendakwa telah mendapat sokongan yang kukuh dan meyakinkan daripada Ahli Parlimen untuk membentuk Kerajaan Persekutuan yang baharu. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

ஒற்றுமை அரசாங்கத்திற்குக் கூடாட் சுயேச்சை எம்.பி. ஆதரவு

கோத்தா கினபாலு, நவ 26- டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு தாம் ஆதரவளிப்பதைக்
கூடாட் தொகுதிக்கான சுயேச்சை வேட்பாளர் டத்தோ வெர்டோன்
பஹாண்டா இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் பத்தாவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நியமனம்
செய்யும் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா
ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவின் முடிவுக்கு மதிப்பளிக்கும்
வகையில் ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை தாம்
புலப்படுத்துவதாக அவர் சொன்னார்.

எனது நாடாளுமன்றத் தொகுதியின் நன்மைக்காக இந்த முடிவை
எடுத்துள்ளேன். இதன் மூலம் இத்தொகுதி மேம்பாட்டு அலையிலிருந்து
விடுபடாலிருப்பதை உறுதி செய்யவும் மற்ற தொகுதிகளுக்கு இணையான
வளர்ச்சியைp பதிவு செய்யவும் இயலும் என்றார் அவர்.

சமூக நல்வாழ்வு கட்சியின் தலைவர் டத்தோ பீட்டர் அந்தோணி,
கட்சியின் துணைத் தலைவரும் கோத்தா மாருடு நாடாளுமன்ற
உறுப்பினருமான டத்தோ வெட்ரோம் பஹாண்டா, மற்றொரு சுயேச்சை
நாடாளுமன்ற உறுப்பினரான ரிடுவான் ரூபின் ஆகியோருடன் தாம்
டத்தோஸ்ரீ அன்வாரை புத்ரா ஜெயாவில் சந்தித்ததாகப் பஹாண்டாங்
தெரிவித்தார்.


Pengarang :