NATIONAL

ஐக்கிய அரசாங்கத்தின் கீழ் சராவக் கூட்டாட்சி நெருக்கமான உறவு – டத்தோஶ்ரீ அன்வார்

கோலாலம்பூர், நவ 27; மத்திய அரசுக்கும் சரவாக் அரசுக்கும் இடையிலான உறவு, ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக நெருக்கமாக வலுப்பெறும் என்றும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராயிம் கூறினார்.

தனது முகநூலில் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் டத்தோஶ்ரீ அன்வார் இதைக் கூறுகையில், சரவாக் முதலமைச்சர்  காபோங் பார்ட்டியின் (GPS) தலைவரான டான் ஶ்ரீ அபாங் ஜோஹாரிஓபேங் அவரது வீட்டிற்கு  பரிவாரங்களுடன் மரியாதை நிமித்தமாக இன்று காலை அழைத்ததாக அவர் தெரிவித்தார்.

பாரிசன் நேஷனல், ஜிபிஎஸ் மற்றும் ஜிஆரெஸ் (காபுங்கன் நக்யாட் சபா) போன்றவை உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்க கபுங்கன் பார்டி சரவாக் ஒரு பெரிய தூண் ஆகும்.

சிறந்த மலேசியாவை உருவாக்கும் திட்டத்தில் மத்திய மற்றும் சரவாக் அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு நிச்சயமாக நெருக்கமாகவும் வலுவாகவும் இருக்கும் என பல புகைப்படங்களைப் பகிர்ந்த கொண்டவாறு டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

ஜிபிஸ் (GPS)என்பது பார்டி பெசாகா பூமிபுத்ரா (பிபிபி), பார்டி ராக்யாட் பெர்சத்து சரவாக் (எஸ்யுபிபி), பார்ட்டி ராக்யாட் சரவாக்(பிஆர்ஸ்) மற்றும் பார்ட்டி டெமோக்ராடிக் புரோகிரசிக்ப் (பிடிபி) ஆகிய நான்கு சரவாக் கட்சிகளின் கூட்டணியாகும். இது சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், சரவாக்கில் மொத்தமுள்ள 31 நாடாளுமன்ற இடங்களில் 23 இடங்களை வென்றது.

புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா வில் பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்ற அன்று அன்வார் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜிஆர்ஸ்யின் சமீபத்திய பங்கேற்புடன் அவரது தலைமையிலான ஐக்கிய அரசாங்கம் டேவான் ராக்யாட் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அடைந்துள்ளது என்றார்.

-பெர்னாமா


Pengarang :