SELANGOR

ஊராட்சி மன்றங்களின் சேவைத் தரத்தை மேம்படுத்த இலக்கவியல் முறை உதவும்

கிள்ளான், நவ 30- சிலாங்கூரிலுள்ள ஊராட்சி மன்றங்களின் சேவைத்
தரத்தை மேம்படுத்துவதில் இலக்கவியல் தர மேம்பாட்டு வியூகத் திட்டம்
பெரிதும் துணை புரியும் எனக் கூறப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கிடையே தரவு அடைவு மற்றும் அரசு சேவையை
ஏற்படுத்துவதில் இந்த முறை துணை புரிகிறது என்று மலேசிய நிர்வாக
நவீனமயமாக்கல் மற்றும் மேலாண்மை திட்டமிடல் பிரிவின் (மாம்பு)
தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர் யூசுப் இஸ்மாயில் கூறினார்.

இந்த செயல்முறையின் அமலாக்கத்தின் வாயிலாக மக்கள் அரசு
சேவைகளை இணையம் வாயிலாக எந்த இடத்திலிருந்தும் எந்த
நேரத்திலும் பெற இயலும் என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூரிலுள்ள ஊராட்சி மன்றங்களின் சேவைப் பட்டியலில் இடம்
பெற்றுள்ள 538 சேவைகளில் 457 இலக்கவியல் முறையைப்
பயன்படுத்துகின்றன. இவை பயனீட்டாளர்களுக்கு நட்புறவான மற்றும்
எளிதான சேவையை வழங்குகின்றன என்றார் அவர்.

வரும் 2025 ஆம் ஆண்டு வரைக்குமான ஐந்தாண்டு காலத்திற்கான
இலக்கவியல் முன்னெடுப்பின் வியூக இலக்கு, பணி இலக்கு,
தொலைநோக்கு ஆகியவற்றை கோடிட்டு காட்டும் புளுபிரிண்ட் எனப்படும்
பெருந்திட்டமாக இந்த திட்டம் விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :