SELANGOR

11 குடியிருப்பாளர் சங்கங்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள்- காஜாங் நகராண்மைக் கழகம் வழங்கியது

ஷா ஆலம், டிச 8- குடியிருப்பு பகுதிகளில் ரோந்துப் பணிகளைத்
தீவிரப்படுத்துவதற்காக 11 குடியிருப்பாளர் சங்கங்களுக்கு காஜாங்
நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.ஜே.) பாதுகாப்பு உபகரணங்களை
வழங்கியது.

எம்.பி.கே.ஜே. 2022 பாதுகாப்பான நகரம் எனும் திட்டத்தையொட்டி இந்த
பாதுகாப்பு உபகரணங்கள் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர் சங்கங்களுக்கு
வழங்கப்பட்டதாக நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

குடியிருப்புகளில் சிறப்பான முறையில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு
வரும் குடியிருப்பாளர் சங்கங்கள் குறித்து நகராண்மைக் கழக
உறுப்பினர்கள் வழங்கிய பரிந்துரையின் பேரில் இந்த 11 சங்கங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டதாக அது தெரிவித்தது.

தங்கள் குடியிருப்பு பகுதிகளில் ரோந்து நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி
அதன் மூலம் குற்றச் செயல்களைத் தடுத்து பாதுகாப்பான, ஒன்றுபட்ட
மற்றும் மகிழ்ச்சியான நட்புறவுச் சூழலை உருவாக்கும் நோக்கில்
இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.


Pengarang :