NATIONAL

உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவாகர அமைச்சின் பெயர் மாற்றம்

ஷா ஆலம், டிச 9- உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார
அமைச்சு இனி உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சு என அழைக்கப்படும். இந்த பெயர் மாற்றம் இம்மாதம் 3ஆம்
தேதி முதல் அமலுக்கு வந்ததாக அமைச்சின் தலைமைச் செயலாளர்
டத்தோ அஸ்மான் முகமது யூசுப் கூறினார்.

கே.பி.டி.என். என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைச்சின் பெயர்
மாற்றத்திற்கு அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் ஒப்புதல்
தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு உத்வேகமளிப்பதில் அமைச்சு வழங்கும்
பங்களிப்புகேற்ப இந்த பெயர் மாற்றம் அமைவதாக அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு வர்த்தக சூழல் அமைப்பின் வளர்ச்சியை நிலையான,
சாத்தியமான மற்றும் போட்டித் தன்மை கொண்டதாக உருவாக்குவதை
இவ்வமைச்சு தனது முதன்மை இலக்காக கொண்டுள்ளது என்றும் அவர்
குறிப்பிட்டார்.

உள்நாட்டு வணிகத்தின் நீடித்தச் சூழியல் முறை நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பை வழங்கும் என்பதோடு
பயனீட்டாளர்களின் சுபிட்சத்தைக் கட்டிக்காப்பதில் குறிப்பாக வாழ்கைச்
செலவின அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் என்றார்
அவர்.

அமைச்சின் தொலைநோக்கு இலக்கு, பணி இலக்கு மற்றும் பணித்
தன்மையில் எந்த மாற்றம் இராது என்று அவர் நேற்று வெளியிட்ட
அறிக்கையில் கூறினார்.


Pengarang :