NATIONAL

கட்டுமானக் கழிவுகளைச் சட்டவிரோதமாகக் கொட்டிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது

ஷா ஆலம், டிச.9: தெலோக் பங்லிமா கராங்கில் சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டியதற்காகக் கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (எம்பிகேஎல்) லாரி ஒன்றை நேற்று பறிமுதல் செய்தது.

இந்த நடவடிக்கை குப்பை கொட்டும் இடத்தில் அதன் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனை விளைவாக எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்தது.

“அனுமதியின்றி கட்டுமானப் பொருள்கள் மற்றும் வீட்டுக் கழிவுகளைக் கொட்டியதாக அந்த லாரி மீது குற்றம் சாட்டப்பட்டது,” என்று முகநூலின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

லாரிக்கு எதிரான ஜப்தி நடவடிக்கை துணைச் சட்டம் 21 (1), குப்பைகளை சேகரித்தல், அகற்றுதல் மற்றும் அழித்தல் துணைச் சட்டம் 2007 இன் கீழ் எடுக்கப்பட்டதாகக் கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் விளக்கமளித்தது.


Pengarang :