NATIONAL

கே.டி.இ.பி.டபள்யு.எம். நிறுவனத்திற்குச் சிறந்த சேவைக்கான அனைத்துலக  விருது

சிப்பாங், டிச 10- அடிப்படை வசதிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக வர்த்தக ஸ்தாபனப் பிரிவில் 2022ஆம் ஆண்டு ஆசியான் இண்டர்நேஷனல் பிஸ்னஸ் ரிவியு (ஐ.பி.ஆர்.) விருதை கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மீண்டும் பெற்றுள்ளது.

“தி ஐ.ஆர்.பி. ஆசியா குரூப“ குழுமத்தின் உயரிய விருதான இது நேற்று இங்கு நடைபெற்ற இரவு விருந்துடன் கூடிய விருதளிப்பு விழாவில் வழங்கப்பட்டது.

மலேசியாவுக்கான ரஷிய கூட்டமைப்பின்  தூதர் நெய்லி எம் லெத்திபோவிடமிருந்து கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

எதிர்காலத்தில் சிறப்பான சேவையை வழங்குவதற்குரிய உத்வேகத்தைத் தமக்கும் தமது நிறுவனத்தின் 11,000 ஊழியர்களுக்கும் இந்த விருது வழங்கியுள்ளதாக ரம்லி கூறினார்.

குப்பை மற்றும் திடக் கழிவுகளைக் கையாளும் மிகப்பெரிய நிறுவனத்தின் கடப்பாட்டை இது நிரூபிக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் வெள்ளப் பேரிடர் போன்ற நெருக்கடியாக தருணங்களுக்குப் பிறகு உற்சாகம் அளிக்கும் விதமாக இந்த விருது அமைந்துள்ளது என்றார் அவர்.

சட்டவிரோதமாகப் குப்பை கொட்டும் நடவடிக்கைகள் மற்றும் குப்பைகளின் அளவு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை நாங்கள் எதிர் நோக்கி வருகிறோம். இனி எங்களின் ஆற்றலை வலுப்படுத்தி எந்த நேரத்திலும் குப்பைகளை அகற்றும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்குவதில் முனைப்பு காட்டவிருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :