NATIONAL

டியூசன் ஆசிரியர் மீது குழந்தை விற்பனை குற்றச்சாட்டு

ஷா ஆலம், டிச.13: கடந்த ஆண்டு குழந்தை விற்பனை நடவடிக்கையின் மூலம் பணம் பெற்றக் குற்றச்சாட்டை, முன்னாள் டியூசன் ஆசிரியர் ஒருவர் ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று எதிர்த்து வாதிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட 62 வயதான ஜமாலியா அகமது, நீதிபதி மஸ்தி அப்துல் ஹமீதுக்கு முன்னால், மொழி பெயர்ப்பாளரால் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரினார் என ஹரியான் மெட்ரோ வெளியிட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளின் படி, 15 டிசம்பர் 2021 அன்று இரவு மணி 7 க்கு ஜாலான் பினாங்கில் உள்ள ஒரு ஹோட்டல் லாபியில் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் அந்தப் பெண் RM12,000 பணத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது.

RM10,000 ஜாமீன் அனுமதிக்கப் பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும், அவர்களின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் மற்றும் சாட்சிகளைத் தொந்தரவு செய்யக்கூடாது.

சட்டவிரோத வருவாய் தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001யின் பிரிவு 4(1)யின் கீழ் இந்த வழக்கு உள்ளது. வழக்கின் ஆவணச் சமர்ப்பிப்புகள் நாள் ஜனவரி 13, 2023 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பெண் 2021 டிசம்பரில் தத்தெடுப்பதற்காக இந்தோனேசியப் பெண்ணிடமிருந்து பெண் குழந்தையைப் பெற்றதாக கூறப்படுகிறது.


Pengarang :