NATIONAL

தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகம் (KKD) பயனர்களின் தகவல்களை பாதுகாக்கிறது.

கோலாலம்பூர், டிச 14 : மோசடி அல்லது தகவல் திருட்டு போன்ற இணைய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமல் இந்த நாட்டில் உள்ள பயனர்களின் தனிப் பட்டத் தரவுகளை பாதுகாக்கவும் இணையப் பாதுகாப்பு சிக்கல்களைச் செம்மைப்படுத்தவும் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகம் (KKD) செயல்பட்டு வருகிறது.

இணையப் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தரவு பிரச்சனைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதால் தனது தரப்பு ஆய்வு செய்து அப்பிரச்சனைக்கு உடனடி தீர்வை வகுத்து வருவதாகவும் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் வஹமி வட்சில் (Fahmi Fadzil) வலியுறுத்தினார்.

“தரவு ஒரு தேசிய பொக்கிஷம், பல்வேறு செயல்களை மேற்கொள்ள எங்களிடம் தகவல்கள் உள்ளன.  தரவுகளைப் பாதுகாப்பதன் வழி நம் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்,” என்று அவர் நேற்று கூறினார்.

நாட்டில் உள்ள பயனர் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிக அளவில் தரவுகள் வைத்திருப்பவர்களை சைபர் செக்யூரிட்டி மலேசியாவை (சிஎஸ்எம்) தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு பொறுப்பற்ற தரப்பினரால் திருடப்பட்ட 100 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட தரவுகளை நாடு இழந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு இந்த விஷயம் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

இதற்கிடையில், மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நடந்த சம்பவத்தைப் பற்றி புகாரளிக்கவும், அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்கும் வெட்கப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். பேங்க் நெகாரா மலேசியாவின் பராமரிப்பில் கீழ் உள்ள தேசிய மோசடி பதில் மையத்தை (NSRC) காலை மணி 8 முதல் இரவு மணி 8 வரை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

– பெர்னாமா


Pengarang :