NATIONAL

ஜித்ராவில் வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறுவன் பலி

ஜித்ரா, டிச.15: தந்தை ஓட்டிச் சென்ற புரோட்டான் சாகா கார் தடம் புரண்டு கோரோக் ஆற்றில் விழுந்ததில் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

மதியம் மணி 2 அளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பலியான முஹம்மது கைரில் முஹைமின் ஷுஹைமி, அவரது தந்தை ஷுஹைமி ஹாசன் (37) ஓட்டிச் சென்ற வாகனத்தில் இருந்து இறங்கத் தவறியதாக நம்பப்படுகிறது.

மலேசியக் கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சயானி சைடன் கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் தந்தை மற்றும் ஏழு மாதக் கர்ப்பிணியான தாய்

நூருல் அக்மர் ஜைனுல் (35) இருவரும் உயிர் தப்பினர்.

 “ஜாலான் சுங்கை கோரோக் வழியாக ஓட்டிச் சென்ற வாகனம் தஞ்சோங் கபூரிலிருந்து ஜித்ரா நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சுங்கை கொரோக்கில் கவிழ்ந்து மூழ்கியது,” என்று அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.

பிற்பகல் மணி 2.23 அளவில் இந்த சம்பவம் தொடர்பாக அழைப்பு வந்ததாகவும், ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் வாகனத்தை கண்டுபிடித்தபோது, பாதிக்கப்பட்டவர் இன்னும்

வாகனத்தில் இருந்தார், நாங்கள் உடலை வாகனத்திலிருந்து அகற்றினோம். ஐந்து மீட்டர் ஆழமுள்ள ஆற்றில் கார் கவிழ்ந்தது, மேலும் அச் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

 இதற்கிடையில், உடல் பிரேத பரிசோதனைக்காக அலோர்ஸ்ட்டாரில் உள்ள சுல்தானா

பஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் குபாங் பாசு மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்ரிட்டன் ரோட்ஸி அபு ஹாசன் கூறினார்.

 பெர்னாமா


Pengarang :