NATIONAL

பகாங் மாநிலத்தில் உள்ள ஆறுகள், மலைப் பகுதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் மூடப்பட்டுள்ளன

குவாந்தான், டிச 17 : பகாங் மாநில வனத்துறையால் (JPNP) ஆறுகள், மலைப் பகுதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள இடங்களுக்கு அருகில் உள்ள அனைத்து முகாம்களும் உடனடியாக மூடப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையால் (எம்டிஎல்) தொடர் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படும் முன்னறிவிப்பை தொடர்ந்து, சிலாங்கூரில் உள்ள பத்தாங் காலி, கம்போங் குவாந்தான்  ஃபாதர் ஆர்கானிக் ஃபார்ம்  அருகில் முகாம் தளத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜேபிஎன்பி தனது அதிகாரப்பூர்வ முகநூலில் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.

“இந்நடவடிக்கை ஜேபிஎன்பியால் நிர்வகிக்கப்படும் அனைத்து முகாம்களையும்  தனியார் இடங்களான தாமான் எகோ-ரிம்பா லுபோக், மாரான் மற்றும் தாமான் எகோ-ரிம்பா பாரிட் வாட்ஸ், கேமரன் மலை ஆகிய இடங்களையும் உள்ளடக்கியது

“இந்த மழைக்காலம் முழுவதும், இது போன்ற துயர சம்பவங்களைத் தவிர்க்க, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் எதுவும் செய்ய வேண்டாம்” என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

– பெர்னாமா


Pengarang :