NATIONAL

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உதவிகள் வழங்கப்படும்

ஷா ஆலம், டிச.17: பத்தாங் காலி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி விரைவில் வழங்கப்படும்.

நேற்றிரவு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த உதவிகள் மாநில அரசால் ஒருங்கிணைக்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“பிரதமரின் அறிவிப்பின் படி,  நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கு சிலாங்கூர் அரசாங்கம் நன்றியுடன் உள்ளது.

“இந்த உதவி விரைவில் வழங்கப்படும். அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் சுமையைக் குறைக்க முடியும் என்று நம்புகிறோம்,” என்று அவர் முகநூலின் மூலம் கூறினார்.

நேற்றிரவு, இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM10,000 யும் மற்றும் RM1,000 வாங் ஏசான் பண உதவி Bantuan Wang Ihsan (BWI) பிற பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத் தலைவர்களுக்கும் நன்கொடையாகப் பிரதமர் அறிவித்தார்

தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) மற்றும் பிரதமர் துறை (ஜேபிஎம்) ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அப்பணத்தை மாநில அரசுக்கு ஒதுக்கும்.

நேற்றிரவு நிலவரப்படி, 12 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில் பாதிக்கப் பட்ட 94 பேரில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.


Pengarang :