SELANGOR

தடை செய்யப்பட்ட இடங்களில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடிபட்டன

பந்திங், டிச 21- கோல லங்காட் நகராண்மை கழகம் நேற்று மேற்கொண்ட நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட இடங்களில் மேய்ச்சலுக்கு விடப்பட்டதாக நம்பப்படும் மாடுகள் அமலாக்க அதிகாரிகளால் பிடிக்கப்பட்டன.

இங்குள்ள கம்போங் சோடோய் மற்றும் பண்டார் மக்கோத்தா வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட இரு சோதனை நடவடிக்கைளில் இரு மாடுகள் பிடிபட்டதாக நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில் அவ்விரு பகுதிகளிலும் சோதனை மேற்கொண்ட போது 1971ஆம் ஆண்டு எம்.டி.கே.எல்.எருமை மாடு கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 4வது விதிக்கு புறம்பாக சில மாடுகள் தடை செய்யப்பட்ட இடங்களில் சுற்றித் திரிவதைக் கண்டோம்.

அவ்விரு இடங்களிலும் இரு மாடுகள் பிடிபட்டன என்று நகராண்மைக்கழகம்
தெரிவித்தது. இதனிடையே, சாலையோரங்களில் கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும்
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்ட குற்றங்களுக்காக இரு வாகனங்களுக்கு குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும் நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.


Pengarang :