SELANGOR

‘எக்ஸ்ப்ளோரேஸ் பூசிங் கோலா லங்காட் டூலு` திக் தொக் (TikTok)  சேலஞ்ச் மூலம் RM5,000க்கும் மேல் மதிப்புள்ள 24 பரிசுகளை வெல்லலாம்

ஷா ஆலம், டிச 23: ‘எக்ஸ்ப்ளோரேஸ் பூசிங் கோலா லங்காட் டூலு` திக் தொக் (TikTok)  சேலஞ்ச் மூலம் RM5,000 க்கும் மேல் மதிப்புள்ள 24 அற்புதமான பரிசுகளை மக்கள் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 31 அன்று முடிவடையும் இப்போட்டியில் மூன்று எளிய வழிமுறைகள் மூலம் பங்கேற்கக் கூடிய வாய்ப்பு அனைவருக்கும் திறந்திருக்கும் என்று சுற்றுலா சிலாங்கூர் தெரிவிக்கிறது.

“முதலாவதாகச் சிலாங்கூரில் ஏதாவது ஒரு இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவேற்ற வேண்டும். இரண்டாவதாகச் சுற்றுலா சிலாங்கூரின் அதிகாரப்பூர்வப் பாடலான குணா சஹாஜாவை வீடியோ பின்னணியில் பயன்படுத்த வேண்டும்.

” இறுதியாக வழங்கப்பட்ட ஐந்து வேலி அடையாளங்களைப் பயன்படுத்த வேண்டும்,“ எனச் சுற்றுலா சிலாங்கூர் முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.


Pengarang :