SELANGOR

உடைந்த குழாய்களைப் பழுதுபார்க்கும் பணி இன்றிரவு முற்றுப்பெறும்

ஷா ஆலம், டிச 23- குழாய் உடைந்ததால் நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட
உலு சிலாங்கூர் வட்டாரத்தில் லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும்
பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீர் விநியோகப் பணிகளில் மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ்
மையங்கள் மற்றும் நல்லடக்கச் சடங்கு நடைபெறும் இடங்களுக்கு
முன்னுரிமை அளிக்கப்படுவதாகப் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென்.
பெர்ஹாட் நிறுவனம் கூறியது.

ஜாலான் புக்கிட் பெருந்தோங்கில் ஏற்பட்ட குழாய் உடைப்பை சரி செய்யும்
பணி காலை 11.00 மணி முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக 50 இடங்களில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத்
தடை ஏற்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்தது.

பழுதுபார்ப்பு பணிகள் இரவு 8.00 மணியளவில் முற்றுப் பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் நீர் விநியோகம் கட்டங் கட்டமாக
வழக்க நிலைக்குத் திரும்பும் பயனீட்டாளர்களின் குடியிருப்புகள்
அமைந்துள்ளத் தொலைவைப் பொறுத்து நீர் விநியோக நேரம்
மாறுபடும் என ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில்
குறிப்பிட்டுள்ளது.

இந்த நீர் விநியோகத் தடை தொடர்பான மேல் விபரங்களைப் பொது மக்கள்
www.airselangor.com என்ற அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :