NATIONAL

திரங்கானு மற்றும் கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஷா ஆலம், டிச.23: திரங்கானு மற்றும் கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 48,363 ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை டிசம்பர் 21 அன்று 72,266 ஆக இருந்தது.

தேசியப் பேரிடர் மேலாண்மை (நட்மா) அறிக்கையின் படி, திரங்கானுவில் 25,174 பேரும் கிளந்தனில் 23,189 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 230 தற்காலிகத் தங்கும் மையங்கள் திறக்க பட்டுள்ளதாகவும் காட்டுகிறது.

பல நாட்களாக பெய்த கன மழையைத் தொடர்ந்து பல மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆனால் தற்போது தண்ணீர் குறைந்து வருவதாகவும் பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், காலையில் கிளந்தான் மற்றும் திரங்கானுவில் பல இடங்களில் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது my Cuaca பயன்பாட்டைப் பதிவிறக்கவும் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Pengarang :