எல்.ஆர்.டி.- எம்.ஆர்.டி நிலைய மின்படிக்கட்டுகளை மாற்றும் பணி பிப்ரவரியில் முற்றுப் பெறும்

கோலாலம்பூ, டிச 23- இலகு இரயில் சேவை (எல்.ஆர்.டி.), எம்.ஆர்.டி
மற்றும் மோனோ இரயில் நிலையங்களில் மின் படிக்கட்டுகளை மாற்றும்
பணி வரும் பிப்ரவரி மாதம் முற்றுப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மின்படிகட்டுகளுக்கான முதல் கட்ட உபரி பாக தருவிப்பை
இம்மாத தொடக்கத்தில் தாங்கள் பெற்றதாக ரெப்பிட் ரெயில்
சென்.பெர்ஹாட் நிறுவனம் கூறியது.

உலக விநியோக சங்கிலி தொடரில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக அந்த
உபரி பாகங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக அந்நிறுவனம்
தெரிவித்தது.

உபரி பாகங்கள் தயாராக உள்ள நிலையில் அசல் உபகரண உற்பத்தி
ஒப்பந்ததாரர் மூலம் பழுதுபார்ப்பு பணிகள் கட்டங் கட்டமாக
மேற்கொள்ளப்பட்டு வரும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுமை
பெறும் என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இம்மாதம் 15ஆம் தேதி வரை பத்து எம்.ஆர்.டி. நிலையங்களில் 20
ஹெண்ட்ரெயில் மற்றும் மூன்று ஸ்டெப் செய்ன் மாற்றும் பணி
மேற்கொள்ளப்பட்டு அந்த மின்படிக்கட்டுகள் மீண்டும் செயல்படத்
தொடங்கியுள்ளன.


Pengarang :