SELANGOR

வெள்ள அபாயத்தைத் தவிர்க்கத் துப்பரவு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் – KDEB கழிவு மேலாண்மை

ஷா ஆலம், டிச 28: வெள்ள அபாயத்தைத் தவிர்க்கத் துப்பரவு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) உத்தரவாதம் அளிக்கிறது.

குறிப்பாக 1.5 மீட்டருக்குக் கீழ் உள்ள வடிகால்கள் சுத்தம் செய்தல், ஒவ்வொரு வாரமும் மொத்தமாகக் குப்பைகளை சேகரித்தல், தண்ணீர் ஓடுவதற்கு தடை இல்லாமல் இருப்பதை உறுதி செய்தல் ஆகியவை இதில் அடங்கும் என்று அதன் நிர்வாக இயக்குனர் கூறினார்.

சிலாங்கூர் முழுவதும் கனமழை தொடர்ந்தால் வெள்ள அபாயத்தில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

“ஒவ்வொரு மாவட்டத்திலும் வெள்ளத்திற்குப் பின் துப்புரவு பணிகளை மேற்கொள்ள மொத்தம் 600 KDEB கழிவு மேலாண்மை தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர்” என்று டத்தோ ராம்லி முகமட் தாஹிரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

வெள்ளம் ஏற்பட்டால், மாநிலத்தின் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவு நிறுவனம் 1,200 கூடுதல் பணியாளர்களை கொண்டுள்ளது, அவர்கள் மொத்தமாக குப்பைகளைச் சேகரிப்பது உள்ளிட்ட துப்புரவு பணிகளை மேற்கொள்வார்கள்.

“500 RORO (ரோல் ஆன் ரோல் ஆஃப்) டிரக்குகள், புல்டோசர்கள், மற்றும் நீண்ட டிரக்குகள் ஆகியவை எப்போதும் பயன்பாட்டிற்கு தயாராக இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :