NATIONAL

வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்கச் சிலாங்கூர் அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய நிதியை கிளந்தான் அரசாங்கம் பயன்படுத்தும்

கோத்தா பாரு, டிச. 28: வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்கச் சிலாங்கூர் அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய நிதி 500,000 ரிங்கிட்டைக் கிளந்தான் அரசாங்கம் பயன்படுத்தும்.

தும்பட், ரந்தாவ் பஞ்சாங் மற்றும் பாசிர் புத்தே உட்பட மோசமாகப் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் வசிப்பவர்களின் வீடுகள் மீது கிளந்தான் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்றார் மந்திரி புசார் டத்தோ அஹ்மட் யாகோப்.

“பாதிக்கப்பட்ட பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டு அவர்களைத் தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைப்போம். உதாரணமாக ரத்தாவ் பஞ்சாங் மற்றும் பாசிர் புத்தே மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அவர் தனது அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்த டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடமிருந்து 500,000 ரிங்கிட் மதிப்பிலான கித்தா சிலாங்கூர் வெள்ள நிவாரண காசோலையைப் பெற்றார்.

1,000க்கும் மேல் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை ஆறு பிபிஎஸ்ஸில் உள்ளனர் என்று தெரிவித்தார். 24 மணி நேரத்தில் 623 மில்லிமீட்டர் (மிமீ) மழை பெய்ததன் விளைவாக வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் இன்னும் ஒரு வாரத்தில் தண்ணீர் முழுமையாக குறையும் என எதிர்பார்க்கிறோம்  என்றார்.


Pengarang :