NATIONAL

நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ரூமா மெஸ்ரா ரக்யாட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

ஜெர்தேக்,  டிச 28: நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூமா மெஸ்ரா ரக்யாட் (ஆர்எம்ஆர்) கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளிப்பதைச் சாரிகாட் பெருமஹான் நெகாரா பெர்ஹாட் (எஸ்பிஎன்பி) மூலம் நிதி அமைச்சகம் பரிசீலிக்கும்.

வெள்ளத்தால் முற்றிலும் சேதமடைந்த வீடுகளுடைய பொதுமக்கள் எஸ்பிஎன்பி (SPNB) இன் கீழ் வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று துணை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மட் மஸ்லான் கூறினார்.

“நாளை மாலை SPNB-யிடமிருந்து முழுவதுமாகச் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு (SPNB) தேவைப்படும் உதவிகளைப் பற்றிய விரிவான தகவல்களைப் பெறுவேன் என்றார்.

சொந்த நிலத்தில் ரூமா மெஸ்ரா ரக்யாட் (RMR) கட்டுவது இந்த நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஒரு முறையாகும், ஆனால் மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

“இந்த விண்ணப்பம் ஒரு விருப்பம் மட்டுமே, ஏனென்றால் பைத்துல்மால் போன்ற பிற தரப்பினரின் உதவிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்,” என்று அவர் கிராமத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைப் பார்வையிட்ட போது கூறினார்..

கம்போங் லாவில் உள்ள 11 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 100 சதவீதம் அழிந்துவிட்டன, மற்றொரு வீடு கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது என்று பெசுட் மாவட்டப் பாதுகாப்பு அதிகாரி, கேப்டன் (PA) ரம்லான் ரோஸ் வாஹிட் நேற்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்

 – பெர்னாமா


Pengarang :