SELANGOR

பல்வேறு குற்றங்களுக்காக உணவகங்கள் நடத்துபவர்களுக்கு 162 அபராதமும் 18 நோட்டிஸ்களும் வெளியிடப்பட்டுள்ளன – கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில்

ஷா ஆலம், டிச 28: கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (MPKS) கடந்த மே முதல்
அக்டோபர் வரை பல்வேறு குற்றங்களுக்காக உணவகங்கள் நடத்துபவர்களுக்கு 162
அபராதம் மற்றும் 18 நோட்டிஸ்களையும் வெளியிட்டடுள்ளது. தொம்மியம்
சோதனையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் சுகாதாரத்துறை மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட சுகாதார அலுவலகம்
ஒன்றினைந்து இரவு உணவகங்கள் மீது சோதனை மேற்கொண்டதாக உள்ளூர்
அதிகாரசபை (பிபிடி) தெரிவித்துள்ளது. இச்சோதனையில் மொத்தம் 77 உணவகங்கள்
இடம்பெற்றுள்ளன.

இந்த உணவகங்களின் தூய்மை ஒரு தரமானதாக இருப்பதை உறுதிசெய்யவும்
உணவு பாதுகாப்பான முறையில் உள்ளதற்கான உத்தரவாதத்தை அளிக்கவும்
இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.

உணவகங்கள் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதை இது
நோக்கமாகக் கொண்டுள்ளது என இன்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

உரிமம், வணிகம் மற்றும் தொழில்துறை வர்த்தக விதிகள் (MDKS) 2007 மற்றும் உணவு
கையாளுதல் விதிகள் (MDKS) 2007 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைகள்
எடுக்கப்படுகின்றன.

கூடுதலாக, உணவு நிறுவன உரிம விதிகள் (MDKS) 2007 மற்றும் உணவு சட்டம் 1983,
உணவு ஒழுங்குமுறைகள் 1985 மற்றும் உணவு சுகாதார விதிமுறைகள் 2009
ஆகியவையும் இதில் இடம்பெறும்.

எலி மற்றும் கரப்பான் பூச்சி கழிவுகள் இருப்பதுடன், சுகாதாரம் திருப்திகரமாக
இல்லாததால், எட்டு உணவகங்கள் 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவுச் சட்டம் 1983 இன் பிரிவு 11யி கீழ் அந்த உணவகங்களுக்கு எதிரான
நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது மற்றும் மீண்டும் செயல்பட
அனுமதிக்கப்படுவதற்கு முன்பு உடனடியாக முழுமையாக சுத்தம் செய்ய வேண்டியது
அவசியம்.

உணவகங்கள் நடத்துபவர்கள் நல்ல முறையில் சுகாதாரத்தைப் பராமரிக்க
இதுபோன்ற சோதனைகள் விரிவுபடுத்தப்படும்.


Pengarang :