நாட்டில் மூன்றாம் பள்ளித் தவணை ஜனவரி 1ஆம் தேதி தொடங்குகிறது

ஷா ஆலம், டிச 29- நாட்டில் ‘ஏ‘ பிரிவில் உள்ள பள்ளிகளில் 2022/2023ஆம்
ஆண்டிற்கான மூன்றாம் கல்வித் தவணை வரும் ஜனவரி முதல் தேதி
தொடங்குவதாகக் கல்வியமைச்சர் அறிவித்துள்ளார்.

அதே சமயம் ‘பி‘ பிரிவில் உள்ள பள்ளிகளில் மூன்றாம் கல்வித் தவணை
வரும் ஜனவரி மூன்றாம் தேதி ஆரம்பமாகும் என்று அமைச்சர்
ஃபாட்லினா சீடேக் கூறினார்.

பள்ளி செல்லும் அனைத்து மாணவர்களுக்கு எனது வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில்
தெரிவித்துள்ளார்.

ஜொகூர், கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்கள் ‘ஏ‘ பிரிவில்
உள்ளன. ‘பி‘ பிரிவில் மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங் பேராக்,
பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம்
கோலாலம்பூர், புத்ரா ஜெயா மற்றும் லபுவான் ஆகிய மாநிலங்கள் இடம்
பெற்றுள்ளன.

‘ஏ‘ பிரிவு பள்ளிகளில் பள்ளித் தவணை அடுத்தாண்டு ஜனவரி முதல் தேதி
தொடங்கி பிப்ரவரி 16ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே
சமயம் பிப்ரவரி 17 முதல் மார்ச் 18 வரை விடுமுறையாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பி‘ பிரிவு பள்ளிகளில் ஜனவரி 3 முதல் பிப்ரவரி 17 தேதி வரை பள்ளி
செயல்படும் வேளையில் பிப்ரவரி 18 முதல் மார்ச் 19ஆம் வரை
விடுமுறை வழங்கப்படும்.


Pengarang :