SELANGOR

செலாயாங் நகராண்மைக் கழகத்தில் 22 கவுன்சிலர்கள் பதவியேற்பு- 30 விழுக்காட்டு மகளிருக்கு வாய்ப்பு

கோம்பாக், ஜன 4- செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக 22
பேர் நேற்று பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அவர்களில் 30
விழுக்காட்டினர் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த 2023ஆம் ஆண்டிற்கான நியமனத்தில் பத்து விழுக்காடு புது
முகங்களுக்கும் பத்து விழுக்காடு 35 வயதுக்கும் கீழ்ப்பட்ட
இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டிற்கான நகராண்மைக் கழக உறுப்பினர்கள் நியமனத்தில் 20
பேருக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள வேளையில் இருவர்
புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து 22 கவுன்சிலர்களும் நகராண்மைக்
கழகத் தலைவர் டத்தோ முகமது யாஷிட் சைரி முன்னிலையில் நேற்று
பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த பதவியேற்புச் சடங்கில் உரையாற்றிய டத்தோ முகமது யாஷிட்,
நகராண்மைக் கழகம் அமல்படுத்தும் திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும்
நடவடிக்கைகளை மக்களிடம் சேர்க்கும் பிரநிதிகளாக நகராண்மைக் கழக
உறுப்பினர்கள் திகழ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :