SELANGOR

ஜனவரி 5 முதல் 33 பகுதிகளில் ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (RORO) தொட்டிகள் வைக்கப்படும் – உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில்

ஷா ஆலம், ஜன 4: உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎச்எஸ்), ஜனவரி 5 முதல் 33 பகுதிகளில் ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (RORO) தொட்டியின் சேவையை வழங்குகிறது.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு தேவையற்றப் பொருள்களை அப்புறப்படுத்த மக்களுக்கு உதவுவதற்காக இந்த வசதி இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

“மக்கள் பழையத் தளவாட பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் மற்றும் தோட்டக் குப்பைகள் போன்ற மொத்தக் கழிவுகளை ரோரோ தொட்டியில் வீசலாம்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று டன் கொள்ளளவு கொண்ட தொட்டி எட்டு நாட்களுக்கு வைக்கப்படும் என்றும், நிரம்பி இருந்தால் முன்னதாகவே அகற்றப்படும் என்றும் எம்பிஎச்எஸ் தெரிவித்துள்ளது.

“காண்டிராக்டர்கள் மொத்தக் குப்பைகளைச் சேகரிக்க வசதியாக மக்கள் வழங்கப்பட்ட ரோரோ தொட்டிகளில் குப்பைகளை வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இருப்பினும், வீட்டு சமையலறை கழிவுகளை இந்த ரோரோ தொட்டியில் வீசுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏதேனும் கேள்விகள் இருந்தால் உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்தம் துறையை 03-6064 1331/1050 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :