SELANGOR

கடை வியாபாரிகள் மற்றும் உணவகங்களை நடத்துபவர்கள் கட்டாயம் முகக்கவரி அணிய வேண்டும்

கோம்பாக், ஜன 4: கடை வியாபாரிகள் மற்றும் உணவகங்களை நடத்துபவர்கள் முகக்கவரி அணிய வேண்டும் என்று செலாயாங் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎஸ்) வலியுறுத்தியுள்ளது.

முதல் மூன்று மாத ஆரம்ப காலப்பகுதியில் தவறிழைக்கும் நபர்களுக்கு தனது தரப்பு ஆலோசனை வழங்கும் என அதன் தலைவர் தெரிவித்தார்.

“மூன்று மாதங்களுக்குப் பிறகும் யாரேனும் தவறினால், அபராதம் விதிக்கப்படும், அவர்கள் இன்னும் பிடிவாதமாக இருந்தால், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

“செலாயாங் கில் உள்ள அனைத்து வியாபாரிகள் மற்றும் உணவகங்கள் நடத்துபவர்கள் இதைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர், ஏனெனில் இது தூய்மையை உறுதி செய்வதையும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஒரு சூழலை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று டத்தோ முகமட் யாசிட் சாய்ரி இன்று கூறினார்.

2023 ஆம் ஆண்டுக்கான எம்.பி.எஸ் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவின் பின்னர் உள்ளூராட்சி சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்தில், டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஜனவரி 1 முதல் மாநிலத்தின் நடைபாதை வியாபாரிகள் மற்றும் உணவகங்களை நடத்துபவர்கள் முகக்கவரி அணிவது கட்டாயம் என்று அறிவித்தார்.

இந்த அணுகுமுறை கோவிட்-19 பரவுவதை தடுப்பதோடு, உணவு நச்சுத்தன்மையும் தடுத்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கக்கூடும் என்றார்.


Pengarang :