SELANGOR

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு பள்ளிகளில் பயில சிலாங்கூர்  அறக்கட்டளை வழங்கும் 500 இடங்களுக்கு  கிராமப்புற முதலாம் படிவ மாணவர்கள்  விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜன 4: மலேசியக் கல்வி அமைச்சகத்தின் (கேபிஎம்) சிறப்புத் திட்டத்தின் கீழ் முதலாம் படிவ மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைச் சிலாங்கூர் அறக்கட்டளை ஜனவரி 15 வரை திறந்து வைத்திருக்கும்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 28 பள்ளிகளை உள்ளடக்கிய 500 இடங்கள் உள்ளன, அவை பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளன.      என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மலேசியக் கல்வி அமைச்சகத்தின் (கேபிஎம்) கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகள் அல்லது தனியார் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு அதில் முன்னுரிமை அளிக்கப் படுகிறது.

 

“விண்ணப்பத் தேவைகள், விண்ணப்பதாரர் அல்லது பெற்றோர்களில் ஒருவர்  சிலாங்கூரில் பிறந்தவராக அல்லது குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் இங்கு வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் குடும்ப வருமானம் மாதத்திற்கு RM2000க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

“விண்ணப்பதாரரின் தாய் மற்றும் தந்தை மலேசிய குடிமக்களாக இருக்க வேண்டும். மேலும், அதே போல் விண்ணப்பதாரர் உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியாக ஆரோக்கியமாக உள்ளவராக இருத்தல் அவசியம்.

www.yayasanselangor.org.my என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி  அமைச்சகத்துடன் இணைந்து  யயாசான் சிலாங்கூர் மேற்கொள்ளும் இந்த  சிறப்புத் திட்டத்தின் வழி கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள தங்கும் விடுதிகள் கொண்ட  முன்னணிப் பள்ளிகளில் கல்வி பயிலும்  வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குகிறது.

உதவித்தொகை, பயிற்சி வகுப்புகள் மற்றும் கல்விசார் சிறப்புத் திட்டங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


Pengarang :