SELANGOR

பாதுகாப்பு மற்றும் சட்டவிரோதமாகக் குப்பை கொட்டும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க 10 சிசிடிவி கேமராக்கள்

சிப்பாங், ஜன. 4: பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பதோடு, சட்டவிரோதக் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிப்பாங்கைச் சுற்றி மொத்தம் 10 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

சிசிடிவி கேமராக்கள் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட இடங்களில் நிறுவப்பட்டுள்ள தாகச் சிப்பாங் நகரசபையின் தலைவர் டத்தோ அப்ட் ஹமீட் ஹுசைன் கூறினார்.

“இந்த சிசிடிவி கேமராக்கள் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும், சட்டவிரோதக் குப்பைகளை  கொட்டும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் நிறுவப்பட்டுள்ளது.

“இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் நிகழ்ந்தால், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்படும். தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

2023 ஆம் ஆண்டுக்கான சிப்பாங் எம்பி கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்ட போது அதை கூறினார்.


Pengarang :