HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 429 பேர் பாதிப்பு- உயிரிழப்பு பதிவாகவில்லை

ஷா ஆலம், ஜன 5- நாட்டில் நேற்று 429 கோவிட்-19 நோய்த் தொற்றுச்
சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் நான்கு வெளிநாடுகளிலிருந்து
வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

கோவிட்-19 தொடர்புடைய மரணச் சம்பவம் ஏதும் நேற்று பதிவாகவில்லை
என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டது முதல்
இதுவரை அந்நோய்க்கு 36,859 பேர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே, நேற்றைய நிலவரப்படி நாட்டில் 11,696 பேர் கோவிட்-19
நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்களில் 11,084
பேர் அல்லது 94.8 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 581 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்
அவர்களில் 31 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 21
நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்நோய்த் தொற்றிலிருந்து 500 பேர் நேற்று குணமடைந்தனர். இதனுடன்
சேர்த்து இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49
லட்சத்து 79 ஆயிரத்து 668ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :