SELANGOR

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தில் ஒரு பெண் உள்பட நான்கு இந்தியர்களுக்கு வாய்ப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜன 5- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின்
2023ஆம் ஆண்ட தவணைக்கு நான்கு இந்தியர்கள் உள்பட 24 பேர்
நியமனம் பெற்றுள்ளனர்.

இங்குள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற தலைமையத்தின் பூங்கா
தஞ்சோங் மண்டபத்தில் மாநகர் மன்ற உறுப்பினர்களின் பதவியேற்புச்
சடங்கு நேற்று நடைபெற்றது. டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது
அமிர் முன்னிலையில் 24 உறுப்பினர்களும் பதவி பிரமாணம் எடுத்துக்
கொண்டனர்.

இந்த புதிய மாநகர் மன்ற உறுப்பினர் நியமனத்தில் ஒரு பெண்மணி
உள்பட நான்கு இந்தியப் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். பி.கே.ஆர்.
கட்சியைச் சேர்ந்த ஜி.சுரேஷ், ஏ.சுகுமாறன், மற்றும் ஜசெகவை சேர்ந்த கே.
தயாளன், ஆர்.நளினா நாயர் ஆகியோரே அந்த நால்வராவர். இவர்கள்
அனைவரும் கடந்த தவணையிலும் இப்பொறுப்பை வகித்தவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

இந்த பதவி பிரமாணச் சடங்கிற்குத் தலைமையேற்று உரையாற்றிய
முகமது அஸான், சிலாங்கூர் அரசின் கோட்பாடுகளுக்கேற்ப
கொள்கைகளை வகுக்கும் பொறுப்பினை மாநகர் மன்ற உறுப்பினர்கள்
கொண்டிருப்பதாகக் கூறினார்.

இவர்கள் மாநகர் மன்றத்திற்கும் மக்களுக்கு இடையைத் தூதுவர்களாக
இருக்கும் அதேவேளையில் மாநகர் மன்றத்தின் நிகழ்வுகள் மற்றும்
திட்டங்களில் பொதுமக்களின் பங்கேற்பை உறுதி செய்யும் பொறுப்பையும்
கொண்டிருக்கின்றனர் என்றார்.


Pengarang :