SELANGOR

முகக்கவரி அணியாத உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் – பெட்டாலிங் ஜெயா

பெட்டாலிங் ஜெயா, ஜன 5: முகக்கவரி அணியாதப் பெட்டாலிங் ஜெயாவைச்
சுற்றியுள்ள உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

விழிப்புணர்வு பிரச்சாரம் முடிந்த பிறகு, முகக்கவரி அணிவதை உறுதி செய்யும் வகையில்
கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என டத்தோ பண்டார் முகமட் அஸ்ஹான்
எம்டி அமீர் கூறினார்.

ஏற்கனவே அமலாக்கம் தொடங்கப் பட்டுள்ளது, ஆனால் தற்போது தொடக்கக்
கட்டத்தில் உள்ளதால் யாராவது விதிகளை மீறினால், நாங்கள் சம்மன் அனுப்ப
மாட்டோம், ஆனால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்போம்.

இருப்பினும், அவர்கள் முகக்கவரி அணிய தவறினால், அபராதம் விதிக்கப்படும், என்று
அவர் இன்று 2023 ஆம் ஆண்டுக்கான கவுன்சிலர்களின் பதவியேற்பு விழாவில்
கூறினார்.முகமட் அசானின் கூற்றுப்படி, வணிகர்கள் விதிகளுக்கு இணங்குவதை உறுதி
செய்வதற்கான நடவடிக்கையாகச் சட்டத்தை அமல்படுத்துபவர்கள் சுகாதார
அதிகாரிகளுடன் களத்தில் இறங்குவார்கள்.

டிசம்பரில், மாநிலத்தில் உணவு வியாபாரிகள் மற்றும் உணவகங்களை நடத்துபவர்கள்,
உணவைக் கையாள்வதில் தூய்மையின் அளவை மேம்படுத்த ஜனவரி 1 முதல்
முகக்கவரியை அணிய வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

இந்த அணுகுமுறை கோவிட்-19 பரவுவதை தவிர்ப்பதுடன், உணவு
நச்சுத் தன்மையையும் தவிர்த்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கச்
செய்யும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :