SELANGOR

கிள்ளான் முனிசிபல் கவுன்சில், இந்த ஆண்டு இறுதிக்குள் மாநகர அந்தஸ்தை அடைய எண்ணம் கொண்டுள்ளது

கிள்ளான், ஜன 5: கிள்ளான் முனிசிபல் கவுன்சில் (MPK), இந்த ஆண்டு இறுதிக்குள் மாநகர அந்தஸ்தை அடைய முடியும் என்று நம்புகிறது.

அந்த நிலையை அடைவதற்கு மாநில அரசின் ஆட்சிக் குழுவின் ஒப்புதலைப்  பெற்றுள்ளதாக எம் பி கே தலைவர் கூறினார்.

“இதற்குப் பிறகு நாங்கள் அபிவிருத்தி மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்திற்கு (கேபிகேடி) முன்மொழிய வேண்டும், பின்னர் அவர்கள் அதை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக முன்வைப்பார்கள்.

“அங்கீகரிக்கப் பட்டால், இந்த ஆண்டு இறுதிக்குள் கிள்ளான் மாநகர் அந்தஸ்தை அடையும்” என்று நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

எம்.பி.கே தலைமையகத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான எம்.பி.கே கவுன்சிலர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டுக்குள் மாநகர் அந்தஸ்தை அடைவதற்கான முயற்சியில், கிள்ளான் நகரின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியதாக நோரைனி தெரிவித்தார்.

கிள்ளான் முனிசிபல் கவுன்சில் எதிர்கொள்ளும் சவால்களில் ராயல் சிட்டியின் உள்கட்டமைப்பை, குறிப்பாகப் பழைய கட்டிடங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

“எனவே, கிள்ளான் நகரின் சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் பாரம் பரியத்தைப் பாதிக்காமல் முன்னேற்றம் அடைய, பொறுப்புகளை திறமையாகவும் நேர்மையாகவும் நிறைவேற்ற அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :