SELANGOR

சிஜாங்காங், கோலா லங்காட்டில் உள்ள குப்பைக் குவியலை KDEB கழிவு மேலாண்மை அகற்றியது

ஷா ஆலம், ஜன 5: ஜாலான் பத்து 7 செம்படான், சிஜாங்காங், கோலா லங்காட்டில்
உள்ள குப்பைக் குவியலை KDEB கழிவு மேலாண்மை நேற்று அகற்றியது.

துப்புரவு பணியின் போது 13 ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO) தொட்டிகள் மற்றும்
இரண்டு இயந்திர வாகனங்கள் பயன்படுத்தப் பட்டதாகக் கோலா லங்காட் முனிசிபல்
கவுன்சில் (MPKL) தெரிவித்துள்ளது.

நேற்று காலை, கம்போங் சிஜாங்காங்கில் சுத்தம் செய்யும் பணி KDEB கழிவு
மேலாண்மையால் மேற்கொள்ளப்பட்டது  என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது கோலா லங்காட் முனிசிபல் கவுன்சிலர் ரோகயா
இப்ராஹிம், சிஜாங்காங் கிராமத் தலைவர் சொஹைனி @ முகமட் சுஹைமி எம்டி கமல்
மற்றும் கோலா லங்காட் KDEB கழிவு மேலாண்மையின் நடவடிக்கை எக்ஸிகியூட்டிவ்
முகமட் ஹஃபிஷ் மஹ்சான் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்தனர்.

கொடுக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை கொட்டவும் மற்றும்
தூய்மையைப் பராமரிக்கவும் சுற்றுப்புற குடியிருப்புவாசிகள் ஒத்துழைப்பை உள்ளாட்சி
நிர்வாகம் கோரியுள்ளது.

ஏதேனும் கேள்விகள் அல்லது புகார்கள் இருந்தால் MPKL திடக்கழிவு மேலாண்மை,
சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையை 012-300 4847 எண்ணின் மூலம் தொடர்பு
கொள்ளலாம்.


Pengarang :