SELANGOR

ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு இலவசச் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்

ஷா ஆலம், ஜன 5: சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்பிஐ கட்டமைப்பு  இந்த மார்ச் மாதம் முதல் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கான மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும்  திட்டத்தை மேற்கொள்ளும்.

கோம்பாக் மற்றும் கோலா சிலாங்கூரை சுற்றியுள்ள தேர்ந்தெடுக்கப் பட்ட ஐந்து முதல் 10 மேல்நிலைப் பள்ளிகளில் இந்தத் திட்டத்தின் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கார்பெரட் சமூகப் பொறுப்புத் தலைவர் கூறினார்.

“இந்த திட்டத்தை நாங்கள் செய்வது இதுவே முதல் முறை. எங்களிடம் உள்ள சிலாங்கூரின் கூடுதல் வகுப்பு திட்டத்தின் (PTRS) தரவு மூலம் மாணவர்களை தேர்ந்தெடுப்போம்.

“எனவே, சிலாங்கூரின் கூடுதல் வகுப்பு திட்டம்  அதிக வரவேற்பை பெறும், ஏனெனில் அத்திட்டம் கல்வியை வழங்குவது மட்டுமின்றி பிற நலன் சார்ந்த விஷயங்களிலும் உதவி புரிகிறது,” என்று அஹ்மத் அஸ்ரி ஜைனல் நோர் சிலாங்கோர்கினியிடம் கூறினார்.

முன்னோடித் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் பெறுவதற்கான விற்பனை இயந்திரத்தில் பயன்படுத்தக்கூடிய அட்டை வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, கார்டைப் பயன்படுத்துவதன் நோக்கம், வழங்கப்படும் பொருள் வீணாவதைத் தவிர்ப்பதுடன், தரவு பகுப்பாய்வு நோக்கத்திற்காகப் பயன்பாட்டு விகிதத்தை அறிந்து கொள்ளவும் முடியும்.

மாதவிடாய் பிரச்சனையை கையாள்வதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துவதுடன், இலவசமாகச் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் சிலாங்கூர் என்று டத்தோ மந்திரி புசார் தெரிவித்துள்ளார்.


Pengarang :