கேடிஎம் பி ( KTMB) சீனப் புத்தாண்டை முன்னிட்டு இரண்டு கூடுதல் மின்சார இரயில் சேவையை வழங்கவுள்ளது

கோலாலம்பூர், ஜன. 9 – கெரத்தாப்பி தானா மெலாயு பெர்ஹாட் (KTMB) வரவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு கோலாலம்பூர் சென்ட்ரல் முதல் பாடாங் பெசார் வரை இரண்டு கூடுதல் மின்சார இரயில் சேவையை (ETS) வழங்கவுள்ளது.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 19 முதல் 24 வரையிலான கூடுதல் பயணங்களுக்கான டிக்கெட்டின் விற்பனை நாளை (ஜனவரி 9) முதல் திறக்கப்படும் என்று கெடிஎம்பி தெரிவித்துள்ளது.

“கூடுதல் இரயில், கேல் சென்ட்ரலில் இருந்து மாலை 5.05 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.34 மணிக்கு பாடாங் பெசாரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் பாடாங் பெசாரில் இருந்து ரயில் காலை 11 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.36 மணிக்கு கேல் சென்ட்ரலை வந்தடையும்.

“இந்த கூடுதல் இரயில் சேவை தினசரி 630 டிக்கெட்டுகளை வழங்குகிறது; பிசினஸ் கிளாஸ் உட்பட மொத்தம் 3,780 டிக்கெட்டுகள்” என்று அந்த அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, மக்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் வீடு திரும்ப பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

“பொதுமக்கள் கெடிஎம் மொபைல் அப்ளிகேஷன் (KITS) மூலமாகவோ அல்லது கெடிஎம்பி இணையதளமான https://www.ktmb.com.my மூலமாகவோ டிக்கெட்டுகளை எளிதாகவும் வேகமாகவும் இணையத்தின் வழி வாங்குவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மேலும் தகவலுக்கு, பயணிகள் கெடிஎம்பி அழைப்பு மையத்தை 03-2267 1200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது கெடிஎம்யின் அதிகாரப்பூர்வ புதிய மீடியா சேனலையும், கெடிஎம்யின் இணையதளமான https://www.ktmb.com.my யையும் நாடலாம்.

– பெர்னாமா


Pengarang :