SELANGOR

மக்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் திட்டங்களை மாநில நிர்வாகம் திறமையாக நிர்வகிக்கிறது.

ஷா ஆலம், ஜன. 11: மாநில நிர்வாக குழு பல்வேறு திட்டங்கள் மக்களுக்குப் பலன் அளிப்பதை உறுதி செய்யும் வகையில் திறமையாக உருவாக்குகிறது..

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மக்களுக்குப் பயன் தரும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும், 2025ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூர் ஸ்மார்ட் மாநிலம் என்ற இலக்கை அடைய உதவுவதோடு, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்

“இந்த நிர்வாகத்தில், நாங்கள் மக்களின் நன்மைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். மேல் அதிகாரத்தில் உள்ளவர்களைப் பொருட்படுத்தாமல்,  நாங்கள் தொழில்முறை மதிப்புடன் ஒத்துழைப்பு வழங்குகிறோம். அரசு ஊழியரின் சாசனத்தைப் பின்பற்றி நிர்வாகத்தை நடத்துகிறோம்..

2016யில் உணவு வாகன உரிமம் அறிமுகம், 2018யில் கிராமப்புற விடுதிகள் பதிவு, வணிகம் மற்றும் இ-காமர்ஸ் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டதாகவும் அவர் விளக்கினார்.

மக்களை முதன்மைப்படுத்தும் அணுகுமுறையைப் பின்பற்றி கோவிட்-19 பரவல் மற்றும் பெரும் வெள்ளம் போன்ற பெரும் சவால்களை எதிர் கொண்ட போதிலும் சிலாங்கூர் மீள் தன்மையுடையதாக இருப்பதாக அமிருடின் மேலும் கூறினார்.


Pengarang :