NATIONAL

கடந்த ஆண்டு நாடு தழுவிய குற்றங்களின் விகிதம் 4.1 சதவீதம் குறைந்துள்ளது

கோலாலம்பூர், ஜன 11: கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலா காலகட்டத்தில் நாடு தழுவிய குற்றங்களின் விகிதம் 4.1 சதவீதம் குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 52,974 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு 50,819 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

தேசியப் பாதுகாப்பு நிலையை நல்ல முறையில் கட்டுப் பாட்டிலும் வைத்திருந்த ராயல் மலேசியன் காவல்துறையின் (PDRM) செயல்திறனின் விளைவுதான் இந்த சாதனை என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.

2021 ஜனவரி முதல் டிசம்பர் வரை பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுக்காக 1,41,346 வழக்குகள் மற்றும் 163,740 கைதுகள் பதிவு செய்யப்பட்ட போது, போதைப்பொருள் நடவடிக்கைகளை ஒழிப்பதற்கும்

தடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவு, 2022 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 108,273 வழக்குகள் மற்றும் 129,654 கைதுகள் பதிவாகியுள்ளன.

ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 2021யில் 1,186 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 1,261 பேராக அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அக்ரில் சானி கூறினார்.


Pengarang :