SELANGOR

கெமுனிங் இடாமான் சிலாங்கூர் கூ வீடுகளுக்கான சாவியை மந்திரி புசார் ஒப்படைத்தார்

ஷா ஆலம், ஜன 13- கிள்ளான், கெமுனிங் இடாமான் சிலாங்கூர் கூ திட்டத்தில் வீடுகளை  வாங்கியவர்களுக்கு சாவி மற்றும் அங்கீகார கடிதங்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று ஒப்படைத்தார்.

பரமௌண்ட் புரொப்பர்டி சென். பெர்ஹாட் நிறுவனத்தில் மேம்படுத்தப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பை வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயிலும் பார்வையிட்டார் , அடையாள நிகழ்வாக நடைபெற்ற வீடுகளுக்கான சாவி ஒப்படைப்பதற்கு தலைமை தாங்கினார்.

மொத்தம் 750 முதல் 900 சதுர அடி வரையிலான பரப்பளவு கொண்ட 650 வீடுகளை உள்ளடக்கிய இந்த திட்டம் சிறந்த வடிவமைப்புடன் தரமாகவும் கட்டப்பட்டது குறித்து தாம் மனநிறைவு கொள்வதாக அவர் சொன்னார்.

இந்த வீடுகளின் வடிவமைப்பு, தரம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள் குறித்து நான் மனநிறைவு கொள்கிறேன். இதன் மூலம் மக்கள் வசிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சிலாங்கூர் கூ வீடுகள் பி, சி 1 மற்றும் சி 2 பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதாக கூறிய அவர், இந்த வீடுகளுக்கான அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் சான்றிதழ் கடந்தாண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி கிடைத்தது என்றார்.


Pengarang :