SELANGOR

நூறு நாட்களில் 100 சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் மையங்களை அழிக்க அமைச்சு இலக்கு

கோலாலம்பூர், ஜன 13- ஒற்றுமை அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 100
நாட்களில் நாட்டிலுள்ள 100 சட்டவிரோத குப்பைக் கொட்டும் மையங்களை
அழித்து துப்புரவு செய்ய ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு உறுதி
பூண்டுள்ளது.

அனைத்து மலேசியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அமைச்சு
நிர்ணயித்துள்ள அடைநிலைக்கான குறியீடாக இந்த நடவடிக்கை
விளங்குவதாக அதன் அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.
சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டும் தரப்பினருக்கு எதிராக கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில்
எச்சரித்தார்.

கோலாலம்பூரில் கட்டுமானப் பொருள்கள் மற்றும் குப்பைகள்
சட்டவிரோதமான முறையில் கொட்டப்படுவதைத் தடுப்பதற்காக தீவிர
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூட்டர பிரதேசத் திடக்கழிவு
மற்றும் பொது துப்புரவு மேலாண்மை கழகம் கடந்த புதன் கிழமை
கூறியிருந்தது.

கடந்தாண்டு 42 சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் இடங்கள் கண்டு
பிடிக்கப்பட்டதாகவும் அவற்றில் 29 கட்டுமான கழிவுகள் சம்பந்தப்பட்டவை
என்றும் அதன் இயக்குநர் உமி கல்தும் சுஹிப் தெரிவித்திருந்தார்.


Pengarang :