SELANGOR

மாநிலச் சட்டமன்றம் கம்போங் துங்கு “பள்ளிக்குத் திரும்புவோம்“ உதவி திட்டத்திற்கான விண்ணப்ப நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஜன 13: மாநிலச் சட்டமன்றம் கம்போங் துங்குகான “பள்ளிக்குத் திரும்புவோம்“ உதவி திட்டத்திற்கான விண்ணப்பம் ஜனவரி 18 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

பிரதிநிதி லிம் யி வெய் கூறுகையில், குறைந்த வசதி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்களை வழங்க 300 ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

“எண்டெமிக் கட்டம் கடந்துவிட்டாலும், பல குடும்பங்கள் இன்னும் நிதி சிக்கல்களால் போராடி வருகின்றன. எனவே, இத்திட்டம் ஓரளவுக்கு அவர்களின் நிதி சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது,” என அவர் இன்று சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

விண்ணப்பதாரரின் தகுதிகள், கம்போங் துங்கு மாநிலச் சட்டமன்ற  தொகுதிக்குள்  வசிப்பவர்கள், RM4,000 க்கு மிகாமல் குடும்ப வருமானம் மற்றும் ஜக்காட், யாயசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யவாஸ்) மற்றும் பந்துவான் கெஹிடுப்பான் செஜாஹ்தேரா சிலாங்கூர் (பிங்காஸ்) போன்ற திட்டங்களிலிருந்து  உதவிகளைப் பெறாதவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :