SELANGOR

ஹிஜ்ரா கடனுதவித் திட்டத்தின் வழி அனைத்து இனங்களும் பயன் பெறலாம்- ரோட்சியா

ஷா ஆலம், ஜன 13- யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் அனைத்து தொழில் முனைவோருக்குக் குறிப்பக்ச் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு வர்த்தகக் கடனுதவியை வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இன, மத வேறுபாடின்றி அனைத்து வணிகர்களுக்கு கடன் வழங்கப்படுவதாகத் தொழில் முனைவோர் மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது மட்டுமே இந்த திட்டத்தின் பிரதான நிபந்தனையாகும் என்று அவர் சொன்னார்.

தொடக்கத்தில் ஹிஜ்ரா அறவாரியத்தின் மூலம் சிறிய தொகை மட்டுமே கடனுதவியாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது கடன் வரம்பு 100,000 வெள்ளியை எட்டி விட்டது என அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் வாயிலாக பலர் பலன் பெற்றுள்ளனர். மக்களுக்கு உரிய பலன் கிடைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.

இந்த கடனுதவித் திட்டத்தின் வாயிலாக அனைத்து இன மக்களும் பயன் பெற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். சிலாங்கூர் அரசு ஒரே கோட்பாட்டை அனைத்து மக்களுக்கும் அமல்படுத்துகிறது. இதன் மூலம் அனைத்து வியாபாரிகளும் பயன் பெறுவர் என எதிர்பார்க்கிறோம் எனாறர் அவர்.

அனைத்துலக தொழிலியல் அமைப்பு மற்றும் அனைத்துலக வியூகக் கழகத்தின் பேராளர்களை இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த இரண்டு மணி நேர சந்திப்பு நிகழ்வில் 50 பேரடங்கிய அந்த பேராளர் குழுவுக்கு ஹிஜ்ரா திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


Pengarang :