SELANGOR

செமிஞ்சேயில்  பொங்கல் கொண்டாட்டம்

செமிஞ்சே , ஜன 16: நேற்று  செமிஞ்சே வட்டாரத்தில் பொங்கல் விழா தமிழர்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அவ்வட்டார மக்கள் குடும்பத்துடன் இணைந்து சூரியப் பகவானுக்குப் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

பொங்கல் விழாவை கொண்டாடும் அனைவரும் வீட்டை கரும்பு, மாவிலை மற்றும் தோரணம் போன்றவற்றால் அலங்கரித்து இருந்தனர். வீட்டு வாசலின் முன் போடப்பட்டிருந்த வண்ண வண்ண கோலங்கள் கண்களைப் பறித்தன.

இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும் மற்றும் உழவர்களுக்கு நன்றி கூறும் வகையில் இப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதாகச் செமிஞ்சே  வட்டார மக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், குடும்பத்துடன் இணைந்து இந்த விழாவைக் கொண்டாடும் போது உறவுகளிடையே மகிழ்ச்சியும் ஒற்றுமையும் பொங்கி உறவு வலுப்படுகிறது என்றனர்.

உறவுகளைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பையும் இதுபோன்ற விழாக்கள் ஏற்படுத்தி தருகின்றன என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல், இதுபோன்ற விழாக்களைக் கொண்டாடுவதன் வழி காலங்காலமாக நாம் பின்பற்றி வரும் தமிழர்களின் கலை கலாச்சாரமும் பாதுகாக்கப்படுகிறது என்று மேலும் அவர்கள் கருத்து

 தெரிவித்தனர். இவ்வாண்டு தித்திப்பான ஓர் ஆண்டாக அமைய வேண்டி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர் செமிஞ்சே வட்டார மக்கள்.

இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமை சூரியப் பொங்கலும் (15/1/2023), திங்கள் கிழமை மாட்டு பொங்கல் (16/1/2023) மற்றும் இறுதியாக செவ்வாய்க்கிழமை காணும் பொங்கலும் (17/1/2023) தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.


Pengarang :