SELANGOR

சிலாங்கூர் நூலகக் கழகத்தின் ஏற்பாட்டில் 10 வெள்ளி கட்டணத்தில் அடிப்படை மொழி வகுப்பு

ஷா ஆலம், ஜன 16- அடுத்த மாதம் முதல் தேதி தொடங்கி 14
மொழிகளில் அடிப்படை பயிற்சி வகுப்புகளைச் சிலாங்கூர் மாநில பொது
நூலகக் கழகம் நடத்தவுள்ளது.

இயங்கலை வாயிலாக நடத்தப்படும் Language Discovery@Selangor Public Library
எனும் இந்த வகுப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு மொழிக்குக் குறைந்த
பட்சக் கட்டணமாக 10.00 வெள்ளி விதிக்கப்படும் என்று அதன் இயக்குநர்
டத்தின் படுகா மஸ்துரா முகமது கூறினார்.

இந்த வகுப்பில் இத்தாலி, ஜப்பான், பிரஞ்சு, மாண்டரின், துருக்கி, மலாய்,
அரபு, ஹாலந்து, தமிழ், ஸ்பெய்ன், ஜப்பான், கொரியா, ஆங்கிலம், ரஷியா
ஆகிய மொழிகள் கற்றுத் தரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த மூன்று மாதக் கால அடிப்படைப் பயிற்சித் திட்டம் கடந்த 2021ஆம்
ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மொத்தம் 69 ஆசிரியர்கள், 49 பணியாளர்களைக் கொண்ட இந்த திட்டத்தில்
இதுவரை 304 வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளதோடு 4,611 மாணவர்கள்
பங்கேற்று பயனடைந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

பொது மக்கள் குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் தங்களின் மொழி
ஆற்றலை வளர்த்து, அதன் மூலம் தொழில் அல்லது வர்த்தக
வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள உதவும் நோக்கில் இந்த திட்டம்
அமல்படுத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த வகுப்புகள் தொடர்பான மேல் விபரங்களை 016-4260 அல்லது 011-
57791664 என்ற எண்களில் அல்லது https://www.ppas.gov.my/kelas_bahasa/ எனும்
அகப்பக்கம் வாயிலாகப் பெறலாம்.


Pengarang :