SELANGOR

நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த ஒன்றுபடுவீர்- அரசு ஊழியர்களுக்குக் பிரதமர் அழைப்பு

புத்ராஜெயா, ஜன 16- மனநிறைவு கொள்ளும் கலாசாரத்தை அனைத்து
அமைச்சர்களும் அரசு ஊழியர்களும் கைவிட வேண்டும். அதேசமயம்
நாட்டின் நிர்வாகத்தில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்துவதில் அவர்கள்
முனைப்பு காட்ட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

எந்தவொரு நிர்வாகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற
முனைப்பும் விருப்பமும் இருப்பது அவசியம் என்று பிரதமர் துறை
ஊழியர்களுடனான 2023 ஜனவரி மாததிற்கான சந்திப்பு நிகழ்வில் அவர்
கூறினார்.

இந்த அமைப்பு முறை பல ஆண்டுகளாக நிறுவப்பட்டது. ஆனால் அது
வலுவானது என்பதை பணிந்து ஒப்புக் கொள்வதற்குரிய தன்மை
வேண்டும். நாம் புதிய தலைவரை நியமிக்கும் போது மாற்றத்தைக் கொண்ட
வர வேண்டும் என்ற முனைப்பு நிச்சயம் இருக்கும். சொகுசாக இருக்கும்
கலாசாரம் அதாவது “மனநிறைவு கலாசாரம்“ நம்மை ஆட்கொள்ள
அனுமதிக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.

அரசு நிர்வாகத்தில் எளிதான அணுகுமுறை இருந்தால் அனைத்து
தரப்பினரும் ஒன்றிணைந்து இனத்தையும் நாட்டையும் மேம்படுத்த
ஒத்துழைப்பார்கள் என்றார் அவர்.

பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான திறனை வளர்ப்பதற்குப்
பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர்,
அனைத்து திட்டங்கள் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட
வேண்டும் என்றார்.

அண்மையில் நாம் கடுமையான முடிவை எடுத்தோம். நடவடிக்கை
எடுப்பது அதன் நோக்கமல்ல. மாறாக, தொழிலாளர்கள் பிரச்சனையைத்
தீர்க்கும் நோக்கத்தை கொண்டதாகும். காரணம், தோட்டத் தொழில்,
உற்பத்தி மற்றும் சில துறைகளில் கடுமையான ஆள்பலப் பற்றாக்குறை
நிலவுகிறது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :