HEALTHNATIONAL

மருத்துவமனையில் சேர்க்கப்படும் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 27.1 விழுக்காடு குறைந்தது

கோலாலம்பூர், ஜன 16- இம்மாதம் 8 முதல்14 வரையிலான இவ்வாண்டின்
இரண்டாவது நோய்த் தொற்று வாரத்தில் மருத்துவமனையில்
சேர்க்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 100,000 பேருக்கு
27.1 விழுக்காடு என்ற அளவில் அதற்கு முந்தைய வாரத்தை விடக்
குறைந்துள்ளது.

கடந்த 1ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரையிலான முதலாவது
நோய்த் தொற்று வாரத்தில் பதிவானதைக் காட்டிலும் கடந்த வாரம்
ஒன்றாம், இரண்டாம் கட்ட நோயாளிகள் எண்ணிக்கை 36.4 விழுக்காடும்
மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகள் 41.7 விழுக்காடு
குறைந்துள்ளதகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர்
நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மருத்துவமனைகளில் கட்டில்களின் பயன்பாடு முதலாவது நோய்த்
தொற்று வாரத்தை விட இரண்டாவது நோய்த் தொற்று வாரத்தில் 2
விழுக்காடு குறைந்துள்ளது. அவசர சிகிச்சைப் பரிவில் உள்ள
கட்டில்களின் பயன்பாடும் இரண்டு விழுக்காடு குறைந்துள்ளது என அவர்
தெரிவித்தார்.

கடந்த 2022 ஜனவரி 25 முதல் 2023 ஜனவரி 14 வரையிலான
காலக்கட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள்
எண்ணிக்கை 50 லட்சத்து 32ஆயிரத்து 433 பேராக பதிவாகியுள்ளது. நோய்த்
தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 49 லட்சத்து 85
ஆயிரத்து 263 ஆகும் என அவர் சொன்னார்.

இந்நோய்த் தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 36,908 ஆகப்
பதிவாகியுள்ளதாகக் கூறிய அவர், இதுவரை அடையாளம காணப்பட்ட
மொத்த தொற்று மையங்களின் எண்ணிக்கை 7,167 ஆகவும் அதில்
இன்னும் தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை
ஐந்தாகவும் உள்ளன என்றார்.


Pengarang :