NATIONAL

சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது வாகனங்களின் எண்ணிக்கை 71 சதவீதம் அதிகரிக்கும்

கோலாலம்பூர், ஜன 17: இந்த ஞாயிற்றுக்கிழமை சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது சாதாரண நாட்களைக் காட்டிலும் கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை 71 சதவீதம் அதிகரிக்கும் என ராயல் மலேசியன் காவல்துறை (PDRM) எதிர்பார்க்கிறது.

சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ எஸ் சசிகலா தேவி, சராசரியாக தினசரி 100,000 வாகனங்கள் பயணிக்கும் நிலையில், இந்த வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் 171,000 வாகனங்கள் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

“மலேசியக் காவல்துறை உத்திகளை வகுத்து, சாலை விபத்துகளின் விகிதத்தைக் குறைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று ” Op Selamat 19“-ஐத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு சீனப் புத்தாண்டின் போது “Op Selamat-17“ மேற்கொள்ளப் பட்டது. அச்சமயம் 2,810 விபத்துக்கள் மற்றும் 21 இறப்புகள் பதிவாகி இருந்தன. 2020ஆம் ஆண்டு “Op Selamat-16“ போது 4,824 விபத்துகளும் 23 இறப்புகளும் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூரில் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், வடக்கு கிள்ளான், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் அம்பாங் ஆகிய ஆறு விபத்து மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களை தனது தரப்பு அடையாளம் கண்டுள்ளதாக சசிகலா கூறினார்.

சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்புபவர்கள், வீடுகள் உடைத்து களவாடும் அபாயத்தைக் குறைப்பதற்கு அவர்கள் ஊர் திரும்பும் தகவலை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“பொதுமக்கள் அருகில் உள்ள எந்த காவல் நிலையத்தையும் தொடர்பு கொள்ளலாம் அல்லது “PDRM“ போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய கிராமம் திரும்பும் தகவல் படிவத்தை நிரப்பும் படி,” கேட்டுக்கொண்டார்.

– பெர்னாமா


Pengarang :