SELANGOR

சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு நிறுவனம் (பெக்காவானிஸ்) பள்ளிக்குத் திரும்பும் நிதி உதவிக்காக RM200,000 க்கு மேல் ஒதுக்கியுள்ளது

ஷா ஆலம், ஜன. 17: சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு நிறுவனம் (பெகாவானிஸ்) இந்த ஆண்டு பள்ளிக்குத் திரும்பும் உதவிக்காக RM200,000 க்கு மேல் ஒதுக்கியுள்ளது.

ஒவ்வொரு மாநில சட்டசபையில் இருந்து (DUN) 30 மாணவர்கள் இந்த உதவியை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று யாங் டிபெர்துவான் டத்தின் ஶ்ரீ மஸ்டியானா முஹமட் கூறினார்.

ஒவ்வொரு பெறுநரும் இத்திட்டத்தின் மூலம் RM150 பெறுவர். இதற்கு முன்பு அந்த தொகை RM100 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

“இந்த நிதி உதவி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு தயார் படுத்துவதற்கான சுமையை குறைக்கவும்,” என்றார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு மே மாதம் 47 டுன்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் மருத்துவ திட்டத்தைத் தனது தரப்பு தொடரும் என்று மஸ்டியானா கூறினார்.

“பின்னர் பெறப்பட்ட வரவேற்பை தொடர்ந்து, இந்த ஆண்டும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் அத்திட்டத்தை தொடர்வோம்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, நோயாளிகளுக்கு மருந்து மற்றும் தனிப்பட்ட தேவைகளை வாங்குவதற்கு பெகாவானிஸ் RM200,000 ஒதுக்கியது.

இந்தத் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த (B40) ஒற்றைத் தாய்மார்கள் மற்றும் ஊனமுற்ற நபர்களுக்கு (OKU) முன்னுரிமை அளிக்கிறது.


Pengarang :