SELANGOR

“மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்“ திட்டத்திற்கு எம்.பி.ஐ. இவ்வாண்டு வெ.26.8 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜன 19- “மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்“ உதவித்
திட்டத்திற்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கட்டமைப்பு 16 கோடியே
80 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக மாநிலத்தில் குறைந்த வருமானம் பெறும்
குடும்பங்களைச் சேர்ந்த 16,800 மாணவர்கள் தலா 100 வெள்ளி உதவித்
தொகையைப் பெறுவர் என்று எம்.பி.ஐ. நிறுவன சமூகக் கடப்பாட்டுப்
பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத்
தொகுதிகளிலும் தலா 300 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த
வாய்ப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படுவதைச் சட்டமன்ற உறுப்பினர்கள்
உறுதி செய்வதற்காக இதற்கான விண்ணப்ப தேதி ஜனவரி 24ஆம் தேதி
வரை நீட்டிக்கப்படுகிறது என அவர் சொன்னார்.

ஒவ்வொரு தொகுதியிலும் நிர்ணயிக்கப்பட்ட கோட்டா முழுமையாக
பூர்த்தி செய்யப்பட்டவுடன் உதவி நிதியை சம்பந்தப்பட்ட சட்டமன்ற
தொகுதியிடம் வழங்குவோம். அதனை அவர்கள் வரும் பிப்ரவரி
மாதத்திற்குள் மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்பர் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள ஷா ஆலம் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம்
மருத்துவ உபகரணங்களை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த உதவி நிதியைப் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான
வரம்பை மாநில அரசு 2,500 வெள்ளியிலிருந்து 4,000 வெள்ளியாக
இவ்வாண்டு தொடங்கி அதிகரித்துள்ளது.


Pengarang :