NATIONAL

மாநிலத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகக் கண்டறியப்பட்ட 23 பகுதிகளில் சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை கவனம் செலுத்தும்

ஷா ஆலம், ஜன 19: சீனப் புத்தாண்டு முன்னிட்டு நடத்தும் சோதனையின் போது (Op TBC) மாநிலத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகக் கண்டறியப்பட்ட 23 பகுதிகளில் சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை (JPJ) அமலாக்கத்தில் கவனம் செலுத்தும்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலை (பிளஸ்), வடக்கு கிள்ளான் நெடுஞ்சாலை, டமன்சாரா புச்சோங் நெடுஞ்சாலை (எல்டிபி), ஜாலான் மேரு மற்றும் ஜாலான் புக்கிட் கெமுனிங் ஆகியவை இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அதன் இயக்குனர் டத்தோ கைருல் கர் யாஹ்யா கூறினார்.

நேற்று தொடங்கிய 325 ஜேபிஜே உறுப்பினர்களை உள்ளடக்கிய அமலாக்க நடவடிக்கை ஜனவரி 27 வரை நீடிக்கும் என்று அவர் கூறினார்.

“இந்த நடவடிக்கையில் அமலாக்கம் ஒன்பது முக்கிய குற்றங்கள் மற்றும் ஐந்து கூடுதல் குற்றங்களில் கவனம் செலுத்துகிறது. அவை வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விளக்குகளுக்கு கீழ்ப்படியத் தவறுதல், வரிகளை வெட்டுதல், அவசரப் பாதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் போன்றவையாகும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பொதுமக்கள் ஜெபிஜெ சிலாங்கூரை 03-55669442 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.

– பெர்னாமா


Pengarang :