NATIONAL

19வது ஓப் செலாமாட்டின் போது நாட்டின் தலை நகரைச் சுற்றி மொத்தம் 809 சாலை விபத்துக்கள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவு

கோலாலம்பூர், ஜன 22: கடந்த புதன்கிழமை முதல் 19வது ஓப் செலாமட்டின் நான்கு நாட்களில், நாட்டின் தலை நகரைச் சுற்றி மொத்தம் 809 சாலை விபத்துக்கள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) தலைவர் ஏசிபி சரிபுடின் முகமட் சாலெ இரண்டு மரணங்களும் கோலாலம்பூர்-சிரம்பான் நெடுஞ்சாலை மற்றும் பெஸ்ராயா நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்தார். இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இறந்துள்ளனர்.

“Op Selamat விபத்துக்கள் மற்றும் இறப்புகளைக் குறைக்க போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்பை அதிகரிக்கும்,“ என்றார்

“அதற்காக, ஜாலான் டூத்தா, ஜாலான் பகாங், ஜாலான் சிரஸ், ஜாலான் கூச்சிங், ஜாலான் சையத் புத்ரா மற்றும் கோலாலம்பூர்-சிரம்பான் நெடுஞ்சாலை ஆகிய ஆறு இடங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாக அடையாளம் காணப்பட்ட இடங்களாகும். அந்த இடங்களில் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை உறுப்பினர்களை பணியில் நிறுத்தியுள்ளோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், நேற்றிரவு சோதனை நடவடிக்கைகளில் 1,899 சம்மன்கள் வழங்கப்பட்டன, இதில் ஜாலான் கெந்திங் கிள்ளான் மற்றும் ஜாலான் அம்பாங் ஆகிய இரண்டு இடங்கள் உட்பட, இந்த முறை Op Selamat இன் போது பல்வேறு சாலை குற்றங்களுக்காக மொத்தம் 7,998 சம்மன்கள் வழங்கப் பட்டன.

Op Selamat 19 நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஜனவரி 18 முதல் 27 வரை 10 நாட்களுக்கு செயல்படுத்தப் பட்டது மற்றும் ஜனவரி 13 அன்று மலாக்கா, ஆயர் கெரோவில் காவல்துறை துணைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் அவர்களால் தொடங்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :