NATIONAL

சீனப் புத்தாண்டை எம்சிஏ உடன் கொண்டாடிய பிரதமர்

கோலாலம்பூர், ஜன 22.: சீனப் புத்தாண்டை எம்சிஏ உடன் கொண்டாடுவதற்காகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்மா எம்சிஏ வுக்கு இன்று வருகை புரிந்தார்.

எம்சிஏ சீனப் புத்தாண்டில் கலந்து கொண்ட பிறகு பிரதமர், “என்னையும் அசிசாவையும் (டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்) அழைத்ததற்காக டத்தோஸ்ரீ வீ கா சியோங்கிற்கு நன்றி,“ எனக் கூறினார்.

இந்த முறை எம்சிஏ உடனான உறவு நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார பிரச்சனைகளை சமாளிப்பதற்கான முயற்சிகளின் கவனம் செலுத்தத் துணைப்புரியும் என்று அன்வார் கூறினார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு சீனப் புத்தாண்டை ஒன்றாக கொண்டாட விஸ்மா எம்.சி.ஏ-வுக்கு பிரதமர் வருகை புரிந்துள்ளதை அஹ்மத் ஜாஹிட் விவரித்தார், இது மலேசியாவில் உள்ள அனைத்து இனங்களுக்கிடையில் நெருக்கமான ஒற்றுமைக்கான ஒரு நல்ல அறிகுறியாகும்.

“ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ், ஒரு புதிய அரசியல் முறை கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் எம்சிஏ  பிரதமரை அழைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

“தொற்று நோய்க்கு பின் (COVID-19) நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நமக்குள் ஒற்றுமை இல்லை என்றால் அதைச் செய்ய முடியாது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :